தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
Showing posts with label அகராதியியல். Show all posts
Showing posts with label அகராதியியல். Show all posts

Wednesday, July 1, 2020

தமிழ் அகராதிகளும் ஆய்வுகளும்

    



    தமிழ் இலக்கண இலக்கியங்களைப் போலவே நிகண்டு மரபும் தொன்மை வாய்ந்த மரபாகத் தொடர்ந்து வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு திவாகரம் தொடங்கி பிங்கலம் என நீண்ட மரபு அகராதிக்கான அடிப்படையைக் கொண்டு அகராதி நிகண்டாக வளர்ச்சி பெற்றது. நிகண்டுகளின் போக்கானது ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு மாற்றம் பெற்று அகராதியாக வடிவம் பெற்றது. 

    வீரமாமுனிவரின் சதுரகராதி தமிழ் அகராதியியலில் முதல் நூலாக உருவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு அகராதிகள் பலவகைமை களில் உருவாகின. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, தமிழ் லெக்சிகன், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி, மருத்துவ அகராதி, தமிழ் இலக்கணப் பேரகராதி, என அகராதிகளில் பல பயனுள்ளவையாக இருந்து வருகின்றன. மொழி, க்ரியா, சந்தியா, தமிழ்மண் முதலான பதிப்பகங்களும் சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் முதலான நிறுவனங்களும் இதில் பங்களிப்பு செய்துள்ளன.

    இந்த அகராதிகளை ஆவணப்படுத்தியும் ஆய்விற்கு உட்படுத்தியும் பல நூல்கள் தொடர்ந்து எழுந்தன. அகராதிகளை ஆவணமாக்கியதில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட கிரிகோரி ஜேம்ஸ் அவர்களின் சொல்பொருள் குறிப்பிடத்தக்க நூலாகத் திகழ்கின்றது. அகராதி ஆய்வில் பேரா. சுந்தரஞ் சண்முகனார், பேரா. பா.ரா. சுப்பிரமணியன், பேரா. வ. ஜெயதேவன், பேரா. பெ.மாதையன் முதலானோர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிவு அவற்றை ஆவணப்படுத்துவதாக அமைகின்றது. இதில் விடுபட்டவை இருந்தால் இந்தப்பதிவில் உங்கள் கருத்துரையை வழங்குகள்.