வீரமாமுனிவரின் சதுரகராதி தமிழ் அகராதியியலில் முதல் நூலாக உருவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு அகராதிகள் பலவகைமை களில் உருவாகின. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, தமிழ் லெக்சிகன், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி, மருத்துவ அகராதி, தமிழ் இலக்கணப் பேரகராதி, என அகராதிகளில் பல பயனுள்ளவையாக இருந்து வருகின்றன. மொழி, க்ரியா, சந்தியா, தமிழ்மண் முதலான பதிப்பகங்களும் சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் முதலான நிறுவனங்களும் இதில் பங்களிப்பு செய்துள்ளன.
இந்த அகராதிகளை ஆவணப்படுத்தியும் ஆய்விற்கு உட்படுத்தியும் பல நூல்கள் தொடர்ந்து எழுந்தன. அகராதிகளை ஆவணமாக்கியதில் க்ரியா பதிப்பகம் வெளியிட்ட கிரிகோரி ஜேம்ஸ் அவர்களின் சொல்பொருள் குறிப்பிடத்தக்க நூலாகத் திகழ்கின்றது. அகராதி ஆய்வில் பேரா. சுந்தரஞ் சண்முகனார், பேரா. பா.ரா. சுப்பிரமணியன், பேரா. வ. ஜெயதேவன், பேரா. பெ.மாதையன் முதலானோர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிவு அவற்றை ஆவணப்படுத்துவதாக அமைகின்றது. இதில் விடுபட்டவை இருந்தால் இந்தப்பதிவில் உங்கள் கருத்துரையை வழங்குகள்.
அகராதிகள்
அகராதி அடங்கல்கள்
பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள் நன்றி.
ReplyDeleteநன்றி
Deleteசிறப்பான தகவல். எங்களது தொகுப்பு
ReplyDeletehttps://docs.google.com/spreadsheets/u/0/d/1_pQ0FgV9U1wp6X4U9eaQYHkOg9P1btKdPgzaoFBKnU4/htmlview இதுவும் பயன்படலாம்
நன்றி தோழர் நிச்சயமாக
Deleteபதிவிலேயே சேர்த்திருக்கிறேன் தோழர் நன்றி
Deleteஐயா வணக்கம். மேற்கூறிய அகராதிகள் அனைத்தும் PDF வடிவில் அனுப்ப முடியுமா ?
ReplyDeleteஐயா வணக்கம். மேற்கூறிய அகராதிகள் அனைத்தும் PDF வடிவில் அனுப்ப முடியுமா ?
ReplyDeleteஇல்லை ஐயா என்னிடம். இணைய வழியில் சில கிடைக்கின்றன.
Deleteபயனுள்ள தொகுப்பு
ReplyDelete