முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா. இளமாறன்)
மயிலம்
தமிழ்க்கல்லூரியில் இளங்கலையும்,
சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ்
இலக்கியத்துறையில் முதுகலை
மற்றும்
முனைவர்
பட்டங்களைப்
பயின்றவர்.
பேராசிரியர்
ய.
மணிகண்டன்
அவர்களின்
மேற்பார்வையின் கீழ்
பல்கலைக்கழக
மானியக்குழுவின் நிதிநல்கையோடு தமிழ்
இலக்கண உரை வரலாறு: யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில்
ஆய்வினை
நிகழ்த்தியுள்ளார்.
இலக்கணம், உரைகள், பதிப்புகள் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் 10 நூல்கள், முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரின் நூல்கள்: தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு, பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம் – பன்முகவாசிப்பு, முதலானவை ஆகும்.
இதழ்களின் ஆசிரியர் குழு: புதிய புத்தகம் பேசுது, மாற்றுவெளி, காட்சிப்பிழை ஆகியவற்றில் இருந்ததோடு தற்போது வல்லமை, சான்லாக்ஸ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
தற்போது
இவர்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக
அறிவியல்
மற்றும்
கலையியல்
புலத்
தமிழ்த்துறையின் துறைத்தலைவராக தமிழ்ப்பேராயத்தின் செயலராகப் பணியாற்றி
வருகின்றார்.
விருதுகள்:
1. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2013 ஆம் ஆண்டில் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றமை.
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராயம் சிறந்த இளம் ஆய்வாளர்க்கான விருதினை 1,50,000 பொற்கிழியுடன் 2014ஆம் ஆண்டு வழங்கியமை.
இளம் ஆய்வறிஞர் விருது, குடியரசுத் தலைவர் விருது (செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் வழி) மே, 2015.
தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர்
ழகரம் - தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி - பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை - 60 வாரங்கள்
தமிழோடு விளையாடு - தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி - பொதிகைத் தொலைக்காட்சி, சென்னை
வெளிநாட்டுப் பயணம்
2016 ஆம்ஆண்டு அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பினை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து பயணம்செய்தமை.
2019 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேறக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தமை.
No comments:
Post a Comment