இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள்
(தெரிவு செய்யப்பட்டவை)
1. தொல்காப்பியம்
பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 1) (அகத்திணையியல்,
புறத்திணையியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை, 1916
2. தொல்காப்பியம் பொருளதிகாரம்
நச்சினார்க்கினியர் உரை (பகுதி 2) (களவியல், கற்பியல்,
பொருளியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1916
3. தொல்காப்பியம்
பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 3)
(மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன்
அண்ட் கம்பெனியார், சென்னை, 1917
4. தொல்காப்பியம்
பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 4)
(செய்யுளியல், மரபியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார்,
சென்னை, 1917
5. தொல்காப்பியம்
செய்யுளியல் நச்சினார்க்கினியருரை, ரா.ராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப்
பதிப்பு, மதுரை, 1917
6. தொல்காப்பியம்,
பொருளதிகாரம், இளம்பூரணம், பகுதி –க, (அகத்திணையியல், புறத்திணையியல்), நமச்சிவாய
முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920.
7. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், அகத்திணையியலும்,
புறத்திணை யியலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிரம்பூர், சென்னை, 1921.
8. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நமச்சிவாய முதலியார், ஸி. குமார சாமி நாயுடு
ஸன்ஸ், சென்னை, 1922
9. தொல்காப்பியம் மூலம் (
கருத்து, பாடபேதக்குறிப்பு முதலியவற்றுடன்), பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்,
பி.என்.சிதம்பரமுதலியார் அன் கோ. மதுரை, 1922
10. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, கழகப்பதிப்பு, 1923
11. தொல்காப்பியம் சொல்லதிகாரம்
சேனாவரையருரையோடும் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும்,
கழகப்பதிப்பு, 1923
12. தொல்காப்பியம்
பொருளதிகாரம் (மூலம்), கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ்,
சென்னை, 1924.
13. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார்,
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், 1927.
14. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
இளம்பூரணர் பதவுரை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகஸ் தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், 1928
15. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, ரா.வேங்கடாசலம், கரந்தைத்
தமிழ்ச்சங்கம்,1929
16. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (களவியல், கற்பியல், பொருளியல்),
வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1933
17. தொல்காப்பியம்
பொருளதிகாரம் முதற்பாகம் (நச்சினார்க்கினியர் உரை), இது எஸ். வையாபுரிப்பிள்ளை
அவர்களால் ஓலைப்பிரதியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு ம.நா.சோமசுந்தரம்பிள்ளை
ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது,
சென்னை சாது அச்சுக்கூடம், 1934
18. தொல்காப்பியம்
பொருளதிகாரம் இரண்டாம்பாகம் (பேராசிரியம்), இது வே.துரைசாமி ஐயரவர்களால்
ஏட்டுப்பிரதியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து திருத்தப்பட்டு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை
ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப் பட்டது,
சென்னை சாது அச்சுக் கூடம், 1935
19. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்,
மரபியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ்,
சென்னை, 1935
20. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் முழுவதும் வ.உ.சிதம்பரம்பிள்ளை,
எஸ்.வையாபுரிப்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலுஅண்ட்சன்ஸ், சென்னை, 1935
21. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை
விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள்
அழுத்தகம், 1937
22. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை
விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள்
அழுத்தகம், 1938
23. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பவானந்தர் கழகம்,
சென்னை, 1941
24. தொல்காப்பியம் மூலம்,
தி.சு.பாலசுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள், கழகம், 1943
25. தொல்காப்பியம்
பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய
திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால்
பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1943
26. தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அடிக்குறிப்புடன்,
கழகம், 1944
27. தொல்காப்பியம்
பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய
திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால்
பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1948
28. தொல்காப்பியம்
( மூலம்) பதிப்பாசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து
வெளியிடப்பெற்றது, எஸ்.ராஜம், மர்ரே வெளியீடு, சென்னை, 1960
29. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்தவர் இராம.கோவிந்தசாமி
பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் நிர்வாகக் குழுவினருக்காக எஸ்.கோபாலனால்
வெளியிடப்பட்டது. 1962
30. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் உரைக்கோவை முதற்பாகம் (கிளவியாக்கம், வேற்று மையியல், வேற்றுமை
மயங்கியல், விளிமரபு) ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ.சுப்பிர மணியன், அருள் அச்சகம்,
பாளையங்கோட்டை, 1963
31. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு.சுந்தரமூர்த்தி எழுதிய
விளக்கவுரையுடன், கழகம், 1964
32. தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, ஆராய்ந்து விளக்கக்குறிப்புகளுடன், அச்சிட்டார்,
அடிகளாசிரியர், கும்பகோணம் காவேரி கலர் அச்சுக்கூடம், 1969
33. தொல்காப்பியம்
எழுத்ததிகாரம் இளம்பூரணர் (விளக்கவுரையுடன்), கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1969
34. தொல்காப்பியம் சொல்லதிகாரம்,
கல்லாடனார் விருத்தி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,
தமிழ்நாடு அரசு, 1971
35. தொல்காப்பியம்
சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1981
36. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர், 1985.
37. தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி (மெய்ப்பாட்டியல்,
உவமவியல், செய்யு ளியல், மரபியல்), பேராசிரியர் உரை, (குறிப்புரையுடன்)
கு.சுந்தரமூர்த்தி, அண்ணா மலைப் பல்கலைக்கழகம், 1985
38. தொல்காப்பியம்
பொருளதிகாரம்
நச்சினார்க்கினியர்உரை,தொகுதி 1,2, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், 1986
39. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர், 1988.
40. தொல்காப்பிய
மூலம், பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன்,
ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.
இருபதாம்
நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளில் தெரிவு செய்யப்பட்ட பதிப்பு
களின் பட்டியலே மேலே தரப்பட்டுள்ளன. இத் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் என்பது
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட உரைகளின் பதிப்புகள், பெரும்பாலும்
சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், பதிப்புகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக் கப்பட்ட பதிப்புகள்,
ஆராய்ச்சிப் பதிப்புகள், முதல் பதிப்புகள் என்ற பல்வேறு அடிப்படைகளில்
தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.
தொல்காப்பியத்திற்கு
வெளிவந்த புத்துரைப் பதிப்புகள் ( அரசஞ் சண்முகனார், பி.சா.சுப்பிர மணிய சாஸ்திரி,
நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடராஜூலு ரெட்டியார், புலியூர் கேசிகன், புலவர்
குழந்தை, ச.பாலசுந்தரனார் என இன்னும் பலர் செய்த உரைகளோடு கூடிய பதிப்புகள்),
உரைவளப் பதிப்புகள் (மு.அருணாசலம்
பிள்ளை, ஆ.சிவலிங்கனார், க.வெள்ளை வாரணன், கே.பகவதி), ஒப்பீட்டுப் பதிப்புகள்(க.வெள்ளைவாரணன்,ச.வே.சுப்பிரமணியன், க.ப. அறவாணன், ரா.சீனிவாசன்) ஆங்கிலமொழிபெயர்ப்புகள்,
மறுபதிப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் இங்கு அளிக்கப்படவில்லை.
தொல்காப்பியத்திற்கு
வெளிவந்த பதிப்புகள் குறித்து விரிவான
விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் நூல்கள், கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கும்,
1. சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8, சென்னைப் பல்கலைக்கழகம், 1978
2.
மெய்யப்பன், ச.,
தொல்காப்பியப்
பதிப்புகள், தொல்காப்பியச்
சிந்தனைகள், அண்ணாமலை
நகர், 1978, ப-ம். 46.
3.
கிருட்டிணமூர்த்தி,
கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1990.
4.
சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992.
5.
மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008.
6. தொல்காப்பியம்,
சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், பதிப்பாசிரியர், ச.சிவகாமி, உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.
No comments:
Post a Comment