செ(ங்குந்தபுரம்) வை(த்திலிங்கம்) சண்முகம் ( 1932-) அரியலூர் மாவட்டம் செயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த செங்குந்தபுரம் ஊரில் பிறந்தவர். பெற்றோர் சே.வே. வைத்திலிங்கம் -அமிர்தம்மாள். உயர் கல்வியும் பணியும் முழுவதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் தமிழ்த்துறையில் 3 ஆண்டுகளும் மொழியியல் உயராய்வு மையத்தில் விரிவுரை யாளர், பேரராசிரியர், இயக்குநர் என 34 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
1)
இங்கிலாந்து - ரெடிங் பல்கலைக்கழகம்,
உயராய்வு ஒரு கல்வி
ஆண்டு. சமூக மொழியியல் ஆய்வு, British
Museum இல் இருந்த சுவாமிநாதம் (ஐந்திலக்கணம்) கையெழுத்துப் பிரதி, உரை எழுதி பதிப்பித்தவர்.
2) இந்தியக் கல்வி வருகை தரு பேராசிரியராக இந்தோனேஷியா பல்கலைக்கழகம் ஜகார்த்தாவில் 2 ½ ஆண்டு பணி செய்த இவர் ஆய்வு Indonesian Studies (ICCR, புது தில்லி) என்ற நூலினை வெளியிட்டார்.
இவரின் ஆய்வுத்துறைகள்
இலக்கணம் ( தமிழ் ( எழுத்து, சொல், பொருள்), மலையாளம்), வரலாற்று ஒப்பிலக்கணம், சமூக மொழியியல், இலக்கிய மொழியியல் (சங்க காலம் முதல் புதுக் கவிதை வரை). கருத்தன், தொடைக்கட்டு, தொடைமேவல், தொடையாக்கம், யாப்பளவு ஆகிய புதிய கருத்தமைவுகள் முதலானவை விளங்குகின்றன.
இவர் நூல்கள் பெற்ற பரிசுகள்
தமிழ்நாடு அரசு, 2 நூல்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு நூல். மலையாள இலக்கண நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு.
மலையாள மொழியியலாளராக மலையாள
மொழியியல் அறிஞர்கள் என்ற நூலில் ( (திருவனந்த
புரம்) இடம் பெற்றுள்ளது.
ஆய்வுப்புலம்
ஆய்வு
வழி காட்டி= 12 முனைவர் பட்டம், 1 எம்.லிட்
பட்டம்
வெளியீடுகள்
நூல்கள்: 5 ஆங்கிலம் , 32 தமிழ்; கட்டுரைகள் 200க்குமேல் (தமிழ், ஆங்கிலம்; உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களில்).
சிறப்புகள்
1) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அவரது பவள விழா கொண்டாட்டம் சூன் 2008, 'தமிழ் மொழியியல்: புதிய சிகரங்கள்' 600பக்கம்) நூல் வெளியீடு. அறக்கட்டளை -அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ரூபாய் ஒரு லட்சம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். ரூபாய் ஐம்பதினாயிரம்.
2)
இவருடைய வரலாறு, சென்னை, கலைஞன் பதிப்பக வெளியீடு.
3)
இந்திய குடியரசுத் தலைவர் கைகளால் தொல்காப்பிய
விருது.
4.
தமிழ்நாடு அரசு கம்பர்
விருது,
5. எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய பரிதிமாற் கலைஞர் விருது உட்பட 9 விருதுகள்.
1.
திருவனந்தபுரம்,
திராவிட மொழியியல் கழகத்தின் தலைவர் ஒரு ஆண்டு
2.
அண்ணாமலை நகர் அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகத்தின் தலைவராக 3 ஆண்டுகள்
ஆசிரியரின் நூல்கள்
1. Naccinarkkiniyar's
conception of phonology
2. The
language of Tamil inscriptions - 1250-1350 A.D. ( co-author)
3. Dravidian
Nouns ( A comparative study)
4. சுவாமிநாதம்
( உரையும் பதிப்பும்)
5. எழுத்துச்
சீர்திருத்தம்
6. Indonesian
Studies
7. எழுத்திலக்கணக்
கோட்பாடு
8. Aspects
of language development
9. சொல்லிலக்கணக்
கோட்பாடு-1
10. மொழியும்
எழுத்தும்
11. சொல்லிலக்கணக்
கோட்பாடு-2
12. மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும் ( சங்க காலம்)
13.மலையாளமொழியின்
முதல் இலக்கணம் (மலையாளத்தில் மொழி பெயர்ப்பு)
14. சொல்லிலக்கணக்
கோட்பாடு-3
15. கிறித்துவ
அறிஞர்களின் இலக்கணப் பணி
16. அறிவியல்
தமிழாக்கம்
17.இலக்கண உருவாக்கம்
(பல்லவர்பாண்டியர்காலம்)
18.இலக்கியமும் மொழி அமைப்பும்
19. கவிதை மொழி
20. இக்கால எழுத்துத்
தமிழ்
21. குறள் வாசிப்பு
22. கவிதைக்
கட்டமைப்பு
23.தொல்காப்பியத்
தொடரியல்
24. இலக்கண
ஆய்வு
25. மொழிஆய்வு
26. யாப்பும்
நோக்கும்- தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்
27. பொருளிலக்கணக்
கோட்பாடு தொல்காப்பியம் - இறைச்சியும் தொடையும்
28. கவிதை ஆய்வு
29, கேரள பாணீனீயம் முகவுரை: மொழியியல் ஆய்வு (மலையாளத்தில் மொழி பெயர்ப்பு)
30. பொருளிலக்கணக்
கோட்பாடு தொல்காப்பியம் உள்ளுறை
31.தொல்காப்பிய
ஆய்வு
32. அழகின்
சிரிப்பு
33. நான் அறிந்த
தமிழ் அறிஞர்கள்
34. மொழித்
தொல்லியல்
35. பொருளிலக்கணக்
கோட்பாடு உவமவியல் தொல்காப்பியம்
36. Essays
on the History of Malayalam
37. குயில்
பாட்டுத்திறன்
தொடர்புக்கு-
செ.வை. சண்முகம், திருவேரகம், 194, மாரியப்பாநகர்,
அண்ணாமலைநகர் அஞ்சல், சிதம்பரம் 608 002
கைபேசி
98651 96476. மின்னஞ்சல்,
svs.anr2@gmail.com
அருமை.... பேரறிஞர்
ReplyDeleteநன்றி
Deleteஇலக்கண உருவாக்கம் என்னும் நூல் மிகச்சிறந்த நூல்; விடுபட்டுள்ளது. ஜெய்! கொஞ்சம் அனுபவப் பூர்வமாக எழுதலாம். இது கொஞ்சம் தன்விவரப்பட்டியலாக அமைகிறது. எனினும், முயற்சிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி.நூல் அட்டை இல்லை. சேர்க்கிறேன்.
Delete