போன வருஷம் பள்ளிக்கூடம் லீவ் விட்டப்ப ஒரு பையன் கிட்ட கேட்டன். லீவு விட்ட பிறகு இங்க் அடிச்சிக்கிட்டிங்களாடான்னு. இங்க்னா என்ன அங்கிள்னு கேட்டான் முதல்ல. அப்பறம் விளக்கி சொன்ன பிறகு அய்யய்யோ அங்கிள் என்ன அசிங்கம் இது. நீங்க டர்டி அங்கிள்ன்னு சொன்னான்.
ஐஞ்சாவதுல இருந்து நினைவு இருக்கு இங்க் பேனாதான் கையில இருக்கும். மேல கீழ அத ஊத்தி நிரப்பறதுக்குள்ள பெரும்பாடு. ஹீரோ பேனா தான் எங்க கனவு. விலை கொஞ்சம் கூட. தொலைச்சிருவ தொலைச்சிருவன்னு சொல்லியே வீட்ல அவ்ளோ சீக்கிரம் வாங்கித் தர மாட்டாங்க. அவங்க வாய் எவ்ளோ மோசம்னு வாங்கித் தந்த உடனேயே தெரிஞ்சிரும். தொலைச்சி அடியும் வாங்குவன். நான் சொல்லல நீ தொலைப்பன்னு வேற பெருமை பீத்துங்க. கடுப்பா இருக்கும்.
அப்புறம் ஒரு மொக்க கம்பெனி பேனாவ வாங்கித் தருங்க. ஒழுக ஒழுக ஒரு வழியா தேர்வ எழுதி முடிச்ச அன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு வெளியில அதகளம் ஆகும். எல்லார் கையிலயும் கூடுதலா இங்க் பாட்டில் வேற. மாத்தி மாத்தி அடிச்சு நீள நீளமா விசிரி அடிச்சு சட்டைய நீலமாவும் கருப்பாவும் மாத்துவோம். கொஞ்சம் பெரிய பசங்ககிட்ட மாட்டினா அவ்ளோதான் முழுக்க நனைப்பானுங்க. கூடுதலா அந்த சட்டைய அத்தோட பயன்படுத்தக்கூடாதுன்னு வாழச்சாற பிழிஞ்சி இங்க்ல கலந்து அடிப்பானுங்க. அழுகை அழுகையா வரும்.
கட்டிப்புரண்டு சண்டலாம் நடக்கும். வீட்டுல போய் வாங்கு வாங்குன்னு வாங்குவோம். இதல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு படிச்ச வரை சாதாரணமா நடந்த ஒன்னு. இப்ப இதல்லாம் அரசு பள்ளி மாணவர்கள் கிட்ட மட்டும் பாக்கறன். தனியார் பள்ளிகள் பத்திச் சொல்லணுமா என்ன. உலகக்குற்றங்களில் இதல்லாம் ஒன்னுன்னு ஆக்கிருவாங்க. நாங்க டர்டி அங்கிள்தான் தம்பி. டர்டிகளில் இருந்த மகிழ்ச்சி இன்றைய சுத்தங்களில் காணாமலே போய்விட்டது...
புகைப்படம் - கு. சுரேஷ்குமார்
அப்போது இருந்த மகிழ்ச்சியான காலங்களை என் மகன்களுக்கு காட்சிப்படுத்தமுடியவில்லை....
ReplyDeleteஉண்மை தான்
Delete👌👌👌👌உண்மை
ReplyDelete👌👌👍
ReplyDeleteஅது ஒரு அழகிய காலம் ஐயா. நவீன உலகில் எல்லாம் மாயை தான். அருமை ஐயா.
ReplyDeleteஅருமை சார்
ReplyDeleteஅழகான நினைவுகள். மறக்க முடியுமா அந்த நாட்களை...
ReplyDelete