தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, July 20, 2020

ஆண் கவியும் பெண் பெயரும்

ஒருமுறை நண்பராக நினைச்ச ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருந்தன். முதுகலை படிச்சப்ப. உங்களுக்கு பிடிச்ச இரண்டு பெண் கவிஞர்கள சொல்லுங்கன்னு. அவர் உடனே வேகமா சுஜாதா மீரான்னு சொன்னார். சொன்ன கையோட அரை பக்கம் விளக்கம் வேற. இருங்க அவங்க ரெண்டு பேரும் ஆண் கவிஞர்கள்னு சொன்னன். உனக்கு தெரியுமா எனக்கு தெரியுமான்னு பயங்கர கோவத்தோட வேணும்னா இன்னும் ரெண்டு பேர சொல்லவான்னு கேட்டாரு. கையெடுத்து கும்பிட்டு அத்தோட திரும்பனதுதான் இன்னும் அவர சந்திக்கல. தொல்காப்பியத்துல இருந்து அதுக்கு சைடு ரெபரன்ஸ்லாம் கடைசியா தந்தாரு பாருங்க. அதான் ரொம்ப பொறுத்துக்க முடியல.

3 comments:

  1. புறநானூறு எழுதிய ஆசிரியரின் பெயரைக் கேட்டார்.தொகுத்தவரா எழுதியவரா என்று கேட்டேன். தொகுத்தவர் உ.வே.சா. என்று தெரியாதா? எழுதியவர் பெயரைச் சொல்லுங்கள் என்றார். அவர் ஒரு நவீன புனைகதை எழுத்தாளர்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்படி எக்குத்தப்பாய் பதில் சொல்லுபவர்களை சந்தித்திருக்கிறேன். தானும் குளம்பி மத்தவர்களையும் குளப்புவார்கள்.

      Delete