பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப
தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி
மாமூலம்
இன்னிலை காஞ்சியோ டேலாதி
யென்பவே
கைந்நிலையு மாங்கீழ்க்
கணக்கு.
திருக்குறள்
திருக்குறள்
அறத்துப்பால்
பாலாகும் வேதப்
பயனாகும் பாயிரநான்
கேலாகே ளில்லறமு
நாலைந்தா - மேலாந்
துறவு பதிமூன்று
தொடர்ந்தூழொன் றென்ப
அறிவுநெறி
யாய்ந்துண்டார் தாம். ( பெருந்தொகை)
திருக்குறள் அறத்துப்பால்
பாயிரம் நான்கு இல்லறம்
இருபான் பன்மூன்றே
தூய துறவறம் ஒன்று ஊழாக
- ஆய
அறத்துப்பால் நால்வகையா
ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால்
வள்ளுவனார் தேர்ந்து. (திருவள்ளுவமாலை - 25)
திருக்குறள் பொருட்பால்
அரசியல் ஐயைந்து
அமைச்சியல் ஈரைந்து
உரைநா டரண்பொரு ளவ்வொன்
- றுரைசால்
படையிரண்டு நட்புப்
பதினேழ்பன் மூன்று
குடியெழுபான்
றொக்கபொருட் கூறு. ( பெருந்தொகை)
திருக்குறள் பொருட்பால்
அரசியல் ஐயைந்து
அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரணிரண்டு; ஒன்று ஒண்கூழ்; - இருவியல்
திண்படை நட்புப்பதினேழ்
குடிபதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை.
(திருவள்ளுவமாலை - 25)
திருக்குறள் காமத்துப்பால்
புணர்தல் பிரிதல்
பொருள்கனவு கற்பென்
றுணருமிரு கூறா
முரைக்கிற் - புணருங்
களவே ழறுமூன்று
கற்பினவயை யைந்தா
அளவுறு காமத்துப்பா
லாம்.( பெருந்தொகை)
திருக்குறள் காமத்துப்பால்
ஆண்பால் ஏழ்; ஆறிரண்டு பெண்பால்; அடுத்தன்பு
பூண்பால் இருபால்
ஓர்ஆறாக - மாண்பாய
காமத்துப் பக்கம்
ஒருமூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார்
நன்கு. (திருவள்ளுவமாலை - 25)
நாலடியார்
நாலடியார்
வெண்பா
வெள்ளாண் மரபுக்கு வேத
மெனச்சான்றோர்
எல்லாருங் கூடி
எடுத்துரைத்த -சொல்லாரும்
நாலடி நானூறு நஙினிதா
வென்மனத்தே
சீலமுட நிற்க தெளிந்து.
நாலடியார் வெண்பா
எண்பெருங் குன்றத்
தெணாஅ யிருமிருடி
பண்பொருந்தப் பாடியபா
நானூறுந் - திண்பொருந்தி
நீரெதிகொண் டோடுதலா
நேரிசைப்பா வென்றதனைப்
பாரெதிர்கொண்
டார்பயனைப் பார்த்து.
நாலடியார் கதை வெண்பா
மன்னன் வழுதியர்கோன்
வையைப்பே ராற்றினிடை
யெண்ணி யிருநான்கோ
டாயிரவர் - உன்னி
எழுதியிடு மேட்டி
லெதிரே நடந்த
பழுதிலா நாலடியைப்
பார்.
நாலடியார் நூலைத் தொகுத்தவர்
ஞாலத் துழிதரு
நற்பாட்டே கொண்டடக்கி
நாலடி நானூ
றெனப்பெயரால் - வாலிதி
னீட்டித் தொகுத்தா
னிசைசால் பதுமனே
கூட்டமைந்த மூன்று பால்
கொண்டு
மிகவும் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர்.