தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Friday, October 16, 2020

காலந்தோறும் தமிழ் இலக்கண நூல்கள் : அறிமுக நோக்கில்...

தமிழில் காலந்தோறும் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி வந்துள்ளன. அவற்றில் கால ஓட்டத்தில் மறைந்த நூல்கள் எண்ணற்றவை. கிடைக்கின்ற இலக்கண நூல்களே தமிழ் இலக்கண வரலாற்றின் வளத்தைப் பேசும்போது மறைந்துபோன நூல்கள் கிடைத்திருந்தால் தமிழின் இலக்கண வளத்தை உலகமே வியந்திருக்கும். தமிழில் கிடைக்கின்ற முதல் இலக்கண நூலாக தொல்காப்பியமே திகழ்ந்தாலும் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல இலக்கண நூல்கள் சிறந்து விளங்கியிருப்பதைத் தொல்காப்பியமே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என விரிந்த தமிழ் இலக்கண மரபு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணம் ஏழாம் இலக்கணம் ஆகிய நூல்களில் புலமை இலக்கணத்தை ஆறாம் இலக்கணமாகவும் தவ இலக்கணத்தை ஏழாம் இலக்கணமாகவும் இணைத்து இலக்கண மரபின் எல்லைகளை விரித்துச் சென்றுள்ளது.

இதனை மையமாக வைத்து காலநிலைப்படி முழுமையாகக் கிடைக்கின்ற இலக்கண நூல்களைப் பட்டியலிடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

1. தொல்காப்பியம்
2. இறையனார் களவியல்
3. புறப்பொருள் வெண்பாமாலை
4.யாப்பருங்கலம்
5. யாப்பருங்கலக் காரிகை
6. வீரசோழியம்
7. நேமிநாதம்
8. தண்டியலங்காரம்
9. நன்னூல்
10. நம்பி அகப்பொருள்
11. மாறனலங்காரம்
12. மாறனகப்பொருள்
13. மாறன் பாப்பாவினம்
14. பிரயோக விவேகம்
15. இலக்கண விளக்கம்
16. இலக்கணக் கொத்து
17. தொன்னூல் விளக்கம்
18. முத்துவீரியம்
19. சாமிநாதம்
20. சந்திராலோகம்
21. குவலயானந்தம்
22.அறுவகை இலக்கணம்
23. ஏழாம் இலக்கணம்.

முதன்மையாகச் சொல்லப்படுகின்ற நூல்களே இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றின் காலம், சமயம், உரைகள் குறித்த மற்ற விவரங்கள் தொடர்ந்து வழங்கப்படும். மறைந்துபோன இலக்கண நூல்கள், பாட்டியல் நூல்கள், நிகண்டுகள், குறு இலக்கண நூல்கள் குறித்தும் தொடர்ந்த பதிவுகளில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment