தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Saturday, March 28, 2020

சித்தனும் புத்தனும் நூல் விமர்சனம் - சீனி, தனஞ்செழியன்


கவிதை நூலிற்கு கவிதை வழி விமர்சனம்





நண்பனைப் படிப்பது போல் 
பேரலாதி வேறேது?

எழுத்தின் வழி தமிழின் கழுத்தில் 
சித்தனும் புத்தனுமாய் 
தோரணங்கட்டி இருக்கிறான்

இலக்கணத்திலும் ஆய்விலுமே 
அமிழ்ந்து கிடந்தவனின் 
இரண்டாம் இளைப்பாறல் இந்நூல்

மஞ்சள் வெயிலில் மாயச்சிறுமியோடு 
வலம் வந்தவனின் நீள்பாதை 
சித்தனும் புத்தனில் தொடர்கிறது

எழுத்து இன்னுமின்னும் 
மின்னத்தொடங்கி விட்டது

ஒவ்வொரு கவிதையும் 
ஆயிரம் யோசிப்புகளை 
நமக்குள் தூவி நிற்கிறது

தலைப்புகளையே கவிதையாய் 
வார்த்திருக்கும் வார்த்தை வித்தகன் 
இந்த இளமாறன்

படிக்க படிக்க பல்சுவை 
கூட்டினைப் படையலாக்கிய 
தமிழ்ப்பகலவன்

குறிப்பாய்
இளமைக்கால வறுமைக்கவிதையில்
கணமேனும் கண்சொட்ட 
நனைந்தே தீர்வர் வாசிப்போர் யாராகிலும்

தமிழ்நன்று செய்த அன்புத்தோழனுக்கு
பேரன்பும் பெருவாழ்த்தும்

எனதின்றைய வாசிப்பில்,,,

சித்தனும் புத்தனும்
பா.ஜெய்கணேஷ்,
துறைத்தலைவர், தமிழ்த்துறை,
அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்கொளத்தூர்.
கைபேசி: 9884277395

பரிசல் வெளியீடு

நூல் பெற: 9382853646

1 comment:

  1. தமிழோடு சிறந்திருக்க நட்பின் வாழ்த்துகள்

    ReplyDelete