தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, June 29, 2020

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் நூல்கள் - எழுதியவை மட்டும்



       


    தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள்  தமது பதிப்புகளுக்கு எழுதிய முகவுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சாமிநாதம் என்னும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர்காலத்தில் அவர் எழுதிய நூல்கள் மறுபதிப்பாகச் செம்மைப்படுத்தப்பட்டு பதிப்பிக்கப்பட்டு தற்போது புதிய வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முனைவர் ப. சரவணன் அவர்களால் தொகுக்கப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட இந்நூல்கள் அனைத்தும்  காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. உ.வே.சா. அவர்களின் நான் கண்டதும் கேட்டதும் நூலானது அடையாளம் பதிப்பகத்தாரால் மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

     முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களால் தொகுக்கப்பட்ட உ.வே.சா. அவர்களின் கடிதங்கள் குறித்த தொகுப்பு உ.வே.சா.நூல்நிலையத்தாராலேயே  வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 700 கடிதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சொல்லப்பட்ட பல செய்திகளை மறுவாசிப்பிற் குட்படுத்த இந்தக் கடிதங்கள் பெரிதும் துணைசெய்வதாக ஆய்வாளர்கள் பலரும் கருத்துரைக்கின்றனர். 

    உ.வே.சா. அவர்களின் நூல்கள் குறித்து பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட போதிலும் அவரின் பதிப்பு முகவுரைகள் முழுத்தொகுப்பும், கடிதங்களின் முழுத் தொகுப்பும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆய்வுப் போக்கில் பல புதிய திசைகளை உருவாக்கும் என்று பலர் கருதுகின்றனர். பார்வைக்காக அவற்றின் முகப்புப் பக்கங்களைப் பின்வருமாறு வழங்குகிறேன். இந்த நூல்களைப் போலவே அவரின் பதிப்புகளில் மறுபதிப்பு செய்யப்பட்டவை மற்றும் அவர் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளை அடுத்தடுத்த பதிவுகளில் வழங்குகிறேன்.




















7 comments:

  1. புதிய நூல்களின் பெயர்களைக் கண்டேன் மகிழ்ச்சி. சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. சிறந்த பதிவு ஐயா...!

    இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பும் பாசமும் மதிப்பும் உரித்தாகுக...!!

    மேன்மை மிகு ப.சரவணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

    அவரது செம்பணியைப் போற்றி வணங்குகிறேன்..!!!

    ReplyDelete
  3. அருமை தமிழ் உலகிற்கு மாபெரும் கொடை சகோதரர்

    ReplyDelete