தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Thursday, July 9, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பக்தி இலக்கியம் (சைவம்)


சைவப்பெரியோர் நால்வர் அவதாரச் சிறப்பு

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகனு - முற்கோலி

வந்திலரே னீறேங்கே மாமறைநூல் தானெங்கே

எந்தைபிரா னைந்தெழுத்தெங் கே.


சமயக்குரவர் வயது

அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்

செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் - இப்புவியிற்

சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்

ணூந்தம் பதினா றறி.


சமயக்குரவர்  திருநட்சத்திரம்

பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்

நீடிய சித்திரை மாதச்  சதயம் நிறைவன்றொண்டர்

ஆடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகந்

தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே.


திருவாசகப் பதிகங்கள்

சிவபுரா ணங்கீர்த்தித் திருவண்டம் போற்றித்

            திருவகவன் முதனாஙாஞ் சதக நூறாம்

இவர் நீத்தல் விண்ணப்ப மைம்ப தாகும்

            மெம்பாவை யம்மானை சுண்ணங்கோத் தும்பி

புவனமகிழ் தெள்ளேணஞ் சாழலிடு பஃதாம்

பூவல்லி திருவுந்தி பத்தொன்ப தாகும்

றுசலொன்ப தாகுமென வுரைத்த வாறே

            ---- --- ---------------------------

திருவாசகப் பதிகங்கள்

திருவன்னை குயிற்பத்துத் திருத்த சாங்கம்

            திருப்பள்ளி யடுகோயின் மூத்ததிருப் பதிகம்

அருள்கோயிற் றிருப்பதிகஞ் செத்திலடைக் கலமே

            யாசையதி சயம்புணர்ச்சி வாழாப்பத் தருட்பத்

தொருபதென வுரைசெய்வர் கழக்குன்ற மேழா

            மொருபதாங் கண்டபத்துப் பிரார்த்தனைபன் னொன்றே

திருமருவு குழைத்தபத்தோ ருயிருண்ணி யச்சன்

            திருப்பாண்டி பிடித்தபத்தோ டேசறவும் பத்தே.

 

திருவாசகப் பதிகங்கள்

திருப்புலம்பன் மூன்றாகுங் குலாப்பத்தற் புதமே

சென்னிதரு வார்த்தைபத் தெண்ணப்பத் தாறாம்

பரற்குரிய யாத்திரைப்பத் தொருப தாகும்

            படையெழுச்சி யிரண்டாகும் பதினொன்று வெண்பா

இருட்டவிரும் பண்டாய நான்மறையே ழாகு

மெட்டாகும் படையாட்சி மின்னேரே ழாகும்

அருட்பெறுமச் சோவொன்பா னாற்பத்தேழ் பதிக

            மகவலுடன் பாட்டறுநூற் றைம்பத் தாறே.


சைவப் பெரியோர்

மாமறையோர் பன்னிருவர் சிவமறையோர் நால்வர்

            மருத்துவரி லொருவர்மன் னவர்களிலோ ரறுவர்

கோமுறைமைக் குறுநிலமன் னரிலைவர் வணிகர்

            குலத்தைவர் வேளாள குலவர்பதின் மூவர்

தாமுறுகு யவர்வேடர் பாணர்செக்கார் கடையர்

            சான்றார்வண் ணார்பரவர் சாலியரிலொருவர்

ஆமருவு மிடையிரண்டோ டறுவர்மர பறியார்

            ஆகவறு பான்மூவ ராகியமா தவரே.


 சிவஞானபோத அதிகரண வெண்பாத்தொகை

ஐயிருப தோரேழு மாங்கமைந்த நாலாறும்

ஐயென்ப தோரெட்டோ டாராறும் - துய்யவெட்டோ

டெண்பத்து மொன்றுஞ் சிவஞான போதத்தின்

மன்னருளும் வெண்பா வகை.

 

சிவஞானபோதம் அதிகரணத் தொகை

மூன்றுநான் கேழுமூன்றே முடிந்தபி னிரண்டி ரண்டே

மூன்றுநான் மூன்று  நன்றாய் முடிந்தபி னிரண்டி ரண்டே

என்றநான் கீறு தாமே யிவையீரா றிலகத் துள்ளே

என்றமுப் பானொன் பானை யெனக்கர னிரங்கி னானே.

 

சிவஞானபோதச் சூரணிவெண்பாக்களின் தொகை

சூத்திரமீ ராறினுக்குச் சூரணிமுப்பா னொன்பா

னேத்தவெண்பா வெண்பா நிரண்டனைத்தும் சேர்த்ததொகை

நூற்றுமுப்பான் மூன்றிவற்றை நுண்ணுணர்வினாய்ந்து ணர்ந்தோர்

வேற்றுருக்கொள் ளாருறுவர் வீடு.

 


No comments:

Post a Comment