தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, July 5, 2020

கழைக்கூத்தாடி



காலம் கலைத்துப் போட்ட
கழைக்கூத்தாடி நான்
அரிதாரம் பூசி
அவதாரம் எடுக்கிறேன்.

எடுத்த அவதாரம்
இயல்பாய் தொலைக்கிறேன்
ஊர் ஊராய்ப் பயணிக்கிறேன்
உறக்கம் இல்லா
நாடோடி ஒருவனி்ன்
பாதம் சுமக்கிறேன்

காகிதக் கப்பல்
ஏறி கடல் கடக்கிறேன்
சிறு சிறு பறவைகளின் அசைவில்
நளினம் காண்கிறேன்
மழைத்துளிகளின்
ஈரம் பொறுக்கி
கிணறு நிரப்புகிறேன்

பாகனின் அங்குசம் நிமிர்த்தி
யானையின் வலி தொலைக்கிறேன்
நிலவை எடுத்து
இராந்தல் விளக்காய் மாற்றுகிறேன்

இயல்புகளைக் கலைக்கிறேன்
கட்டை பூட்டி
கதை சொல்லும் கழைக்கூத்தாடி
நான் எதைச் சுமந்து திரிகிறேன்

கவிதை பா. ஜெய்கணேஷ்
புகைப்படம் : கு. சுரேஷ்குமார்

No comments:

Post a Comment