கானல் நீரொன்றின்
மாய அலையை
கண்ணுக்கெட்டிய
தூரத்தில் தேடிக்
கொண்டிருக்கிறேன்.
மாயை ஒன்றும்
எனக்கு புதிதல்ல
அது தன்னளவில்
வழிப்போக்கன் ஒருவன்
இடுப்பில் கட்டிய துண்டவிழ்த்து
கானல் நீரை அள்ளி எடுத்து
அதனுள் நிரப்புகிறான்.
நீர் வேட்கை கொண்ட
வேட்டை நாயொன்று
அவன் எலும்பு கடித்து நீர் உறிஞ்சிப்
பருக எத்தனிக்கிறது.
வான் துளி ஈரம் சுரக்க
மழைத்துளிகள் கானல் நீரில்
விழ நாய் குழம்பிக் கிடக்கிறது.
வாசம் அறியும் நாசி தூர்ந்து போய்க்
கிடக்கிறது.
மாயை புரியா நாயின்
கண்கள் சொருகி உயிர்தொலைந்து
போகிறது.
வெயில் துளிர்த்து ஈரம் மறைந்து
கானல் மட்டும் தனியே
மின்னிக் கொண்டிருக்கிறது....
கவிதை : பா. ஜெய்கணேஷ்
புகைப்படம்: கு.சுரேஷ்குமார்
No comments:
Post a Comment