தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 7, 2020

சுதந்திரம் என்பது...

எங்க
ஊர்ல ரெண்டு குளம் உண்டு. ஒன்னு தீர்த்த குளம். இன்னொன்னு துணிதுவைக்கிற குளம். சின்ன வயசுல  ஐந்து பேர் வீட்லயாவது டி.வி. பொட்டி இருந்துச்சு. ஆனா கழிவறை இருந்தது அதவிட குறைவுதான். பெரிய பல வீடுகளில் கூட குளியலறை இருக்கும் ஆனா கழிவறை இருக்காது. 

ரெண்டு புளியந்தோப்பு இருக்கும்.   பெரிய அந்தப் புளியந்தோப்புதான் ஊரோட கழிவறைக் களமா இருந்துச்சு. குளம் இருந்ததால ஆண்களுக்கு சொம்பு கூட தேவைப்பட்டது இல்ல. வயசுக்கேத்தவாறு காலைலயே ஊருல குரூப்பா கிளம்பிருவாங்க. அவங்க அவங்க வயசுக்கேத்த கதைகள பேசிக்குவாங்க. பல கதைகள் மறைவுல இருந்து கேட்டவங்களால ஊருக்குள்ள பரவி பெரிய பஞ்சாயத்துலாம் நடந்துருக்கு. தோப்புன்றதால ஒரே இடத்துல உக்காரணும்னு அவசியம் இல்ல. இடம்பெயர்ந்து மாறி மாறி உக்காருவோம். கூடவே கதைகளும் மாறும். 

இந்த சுதந்திரம் வீட்ல கழிவறை கட்டி அதுக்குள்ள கதவ சாத்தி உக்காந்து போனப்ப பறிபோனதா உணர்ந்தன். இடமாற்றம் கிடையாது, கதைகள் கிடையாது காத்து வசதி கிடையாது. கடுப்பா இருக்கும்.

ஆனா எங்க வீட்டுப் பெண்கள் பெருமூச்சு விட்டாங்க. விடியறதுக்கு முன்னாடியோ இருட்டின பிறகோதான் அடர்ந்த முள்வெளி பகுதிய டார்ச்லைட் வெளிச்சத்துல கடந்து உள்ள இருக்கற பாழடைஞ்ச வீட்ல போய்தான் கழிக்க முடியும். ஒவ்வொரு முறையும் உள்ள போய் வெளிய வரதுக்குள்ள உயிர்போயிரும் அவங்களுக்கு. பூச்சி பொட்டு, ஆளுங்க எட்டிப்பாக்கறது, முள்ளு குத்தறது இப்படி பல பிரச்சனைகள சமாளிச்சே பல வருடம் ஓடுச்சு. கழிவறை கட்டச்சொல்லி பலமுறை சொல்லியும் பொருளாதார நெருக்கடி இடம்தராம போய் பின்ன கழிவறை கட்டி முடிச்ச பிறகுதான் அவங்க சுதந்திர காத்து அந்த இருட்டறைக்குள்ள நிம்மதியா சுவாசிச்சாங்க. இது எங்க வீட்ல மட்டும் இல்ல. எல்லாக் கிராமங்களிலும் நகரத்தில் எல்லா நிலைகளிலும் புறந்தள்ளப்பட்ட மனிதர்களுக்கும் பொதுவானதுதான். 
துணிதுவைக்கிற குளம் தான் கழுவுற இடமா இருக்கும். சில நேரங்கள்ல யாராவது கடந்து போறப்ப பசங்க சொல்வானுங்க நம்ம கண்ண மூடிக்குவோம்டான்னு.

இப்பதான் பல்வேறு பாதுகாப்போட தீர்த்தகுளம் தீர்த்த குளமா இருக்கு. முன்னலாம் அதுவுமே இதுக்குதான் பயன்பட்டுச்சு. ஒருநாள் கோயிலுக்கு வந்த ஒருத்தர் குளத்துல கழுவி முடிச்சுட்டு இரண்டு கையாலயும் அந்தத் தண்ணிய தள்ளி விட்டுக்கிட்டு இருந்தார். என்னடா பண்றார்னு பாத்தோம். கொஞ்ச நேரத்துல அந்த தண்ணிய எடுத்து தலைல தீர்த்தமா தெளிச்சுகிட்டு இருந்தார் பயபக்தியோட. மொத்த பசங்களும் விழுந்தடிச்சு சிரிச்சுட்டானுங்க. இன்னைக்கு அந்தக்குளம் தூர்வாரப்பட்டு தீர்த்தகுளமா மட்டுமே இருக்கறத பாக்கறப்ப சநதோஷமா இருக்கு.

 இன்னொரு காரணம் இப்ப ஊர் வளர்ச்சி அடைஞ்சிருச்சு. பெரும்பாலான வீடுகள்ல கழிவறை கட்டியிருக்கு. புளியந்தோப்புக்கு போறவங்க எண்ணிக்கை குறைஞ்சிருச்சு. ஆனா முற்றிலுமா மாறுச்சுன்னு சொல்ல முடியாது. கழிவறைகள் இந்த சமூகத்துல ஆண்களுக்கு ஒருவித அனுவத்தையும் பெண்களுக்கு வேறுவிதமான அனுபவத்தையும் தர முடிந்த இடத்த புரிஞ்சிக்க முடிஞ்சுது.

புகைப்படம்: கு.சுரேஷ்குமார்...

No comments:

Post a Comment