பாரதியார், பாரதிதாசன் ஆகிய இருவரின் அறியப்படாத ஆவணங்களை உருவாக்கித் தமிழ் உலகிற்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர். குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் இன்றும் தமிழ் ஆய்வியலில் தனித்த அடையாளத்துடன் திகழ்கிறார். இவர் மட்டுமல்லாது என்னைப் போன்ற மாணவர்களையும் தொடர்ந்து ஆய்வுப் பயணத்தில் பயணிக்க வைத்து குடியரசுத் தலைவர் கைகளால் இளம் ஆய்வறிஞர் விருதுபெறச் செய்தவர். பேராசிரியர், ஆய்வாளர், பேச்சாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைத் தன்மையுடன் திகழும் பேராசிரியரின் நூல்களை ஆவணப்படுத்தும் பதிவாக இப்பதிவு அமைகின்றது. பேராசிரியரின் அனைத்துப் பணிகளையும் ஆவணப் படுத்துவதாக, ஆராய்வதாக ப. திருஞான சம்பந்தம் (சந்தியா பதிப்பகம், சென்னை) எழுதிய ஆய்வு நூல் குறிப்பிடத்தக்க நூலாகத் திகழ்கிறது. அதையும் இங்கே இணைத்துள்ளேன்.
பேராசிரியர் அவர்களின் நூல்கள்
- தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி
- பாரதிதாசனின் அரிய படைப்புகள் (2001)
- பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார் (2004)
- பாரதிதாசனும் சக்தி இதழும் (2005)
- பாரதிதாசன் இலக்கியம் : அறியப்படாத படைப்புகள் (2005)
- பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள் சுயமரியாதை, சமத்துவம் (2005)
- பாரதிதாசன் கவிதை இலக்கியங்கள்: இறைமை, இந்திய விடுதலை இயக்கம் (2006)
- நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம் (2006)
- மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் (2011)
- ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள் (2012)
- கட்டளைக் கலித்துறை (2014)
- Early Studies in Tamil Prosody (2014)
- பாரதியியல் கவனம் பெறாத உண்மைகள் (2014)
- பாரதியின் இறுதிக்காலம்: கோவில் யானை சொல்லும் கதை (2014)
- பாரதிதாசன் யாப்பியல் (2014)
- மணிக்கொடி மரபும் பாரதிதாசனும் (2014)
- தமிழில் பில்கணீயம்: மணிக்கொடி எழுத்தாளர்கள் - பாரதிதாசன் (2014)
- மணிக்கொடி கவிதைகள் (2016)
மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பணி. போற்றுதலுக்கு உரியது. நன்றி
ReplyDeleteதொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துகள் சார்
ReplyDeleteநன்றி பாலாஜி நிச்சயமாக
Delete