தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 21, 2020

சோறு என்பது...

சாப்பாடு போடறதுக்குன்னு ஒரு மனசு வேணும். சங்க இலக்கியத்துல அகநானூறுல ஒருபாட்டு இருக்கு. வீட்டை விட்டு காதலனோட ஓடிப்போற தப்பு தப்பு உடன்போக்கு மேற்கொள்கிற காதலியோட வளர்ப்பு அம்மா தான் பொண்ணு போற வழியில பத்தறமா போகணும். 

அப்படி அந்த வழியைக் கடந்த பிறகு கோசர்கள் வாழுற நாட்டைப் போய் அவ சேர்ந்துட்டான்னு தனக்கு நிம்மதின்னு சொல்லும். ஏன்னா அந்தக் கோசர்கள் யார் வெறுங்கையோட வந்தாலும் அவங்கள வரவேத்து உண்ண உணவு உடுக்க உடை எல்லாம் கொடுப்பாங்களாம். அதனால தாம் பொண்ணு அங்க போய்ச் சேரனும்னு நினைக்கிறாங்க.சோறு போடறதுல ஒரு ஊரே இப்படி இருந்திருக்குனா சங்க காலத்த பொற்காலம்னு சொல்றதுல ஒன்னும் தப்பு இல்ல. 

அதுவும் வீட்டை விட்டு உடன்போக்கு நிகழ்த்தறவங்களுக்குனா சொல்லவா வேணும் அவங்களோட பெருந்தன்மையை. இன்னொரு பாட்டுல இதே மாதிரி உடன்போக்கு போற பொண்ண நீ போய் கா கான்னு கத்தி கூப்பிட்டனா காக்காவே உனக்கு நல்ல பிரியாணி செஞ்சிதரன்னு ஒரு அம்மா சொல்லும். காக்கா பிரியாணிதான் கேள்விப்பட்டு இருக்கோம். காக்காக்கே பிரியாணி நம்ம ஆளுங்களாலதான் முடியும். இது விருந்தோம்பல் மரபு. 

இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னடி வாழ்ந்தவங்களோட வரலாற வாய்கிழிய பேசற நம்ம இப்போ என்ன பண்றோம். கதவ துறந்து வைச்சி சாப்பிடறது நம்மோளட நாகரிகம்னு சொன்னது போய் சோத்து வேளையா எவனாவது சொந்தக்காரன் வந்துடப் போறான்னு கதவ அடைச்சி சாப்பிடறதுதான் நாகரிகம்னு நாமளே சொல்லிக்க ஆரம்பிச்சுட்டோம்.

 மதிய வேளையில நாங்கலாம் சேர்ந்து உக்காந்து சாப்பிடறப்ப கூட வேலை செஞ்சவர் ஜெய் இன்னைக்கு என்ன அப்பிடின்னு ஆரம்பிச்சு எல்லார் டிபன்பாக்ஸ்லயும் சுத்தி சுத்தி நாலு ரவுண்டு வருவார். முதல் நாள் அவர ஆர்வத்தோட கூப்பிட்டு எடுத்துக்கோங்கன்னு சொன்னவங்களெல்லாம் நாளாக நாளாக பின்வாங்க ஆரம்பிச்சு தங்களோட சமையல் எவ்ளோ கேவலம்னு வரைக்கும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

சாப்பாட்டுக்காக சண்டை போட்டு பரம்பரை பரம்பரையா பிரிஞ்ச குடும்பங்கள்லாம் இருக்கு. சின்னப்பையனா இருந்தப்ப என்னோட உறவினர் சொன்ன ஒருவார்த்தை பத்து வருஷம் அவர் வீட்டுப் பக்கமே என்ன போகவிடாம பண்ணிருச்சு. ஆனா நான் எதிர்பாக்காத என்னோட பேராசிரியர் வீட்டுக்கு எப்ப போனாலும் சோறு மட்டும் இல்லாம இருக்காது. முகமலர்ச்சியோட அவரும் சரி அவர் மனைவியும் சரி பிள்ளைகளும்சரிஎல்லாரும் சோறு போடறதுல கவனிச்சுகுவாங்க. அவர்மேல கருத்து வேறுபாடு இருக்கற பலர் கூட இந்த சோறு போடற விஷயத்துல குறை சொனனதா நினைவு இல்ல. 

சோறு போட்டவங்களும் நினைவுல நிக்குறாங்க சோறு போடதவங்களும் நினைவுல நிக்குறாங்க. இதுல நாம எங்க நிக்குறோம்னுசுத்தி ஒருமுறை பாத்துகணும் போல....

2 comments:

  1. உப்பிட்டவரை உள்ளவும் நினை என்ற சிந்தனையே மேலோங்கியது ஐயா. உடன்போக்கு பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா. புதிதாக தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. அருமை அண்ணா. நானும் தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். சோறு - சோறுபோடுதல் என்னும் நிகழ்வு நிகழாத மனித வாழ்வே இருந்திருக்காது. நீங்கள் சொன்னதைப் போல எனக்குள்ளும் பல நேரங்களில் சோறு போடாமல் விட்ட இடங்களும், சோறு போடக்காத்திருக்கும் மனங்களும் இப்பதிவை வாசிக்கும் சூழலில் நினைவிற்கு வந்தன. உண்மையில் “சோறு” போடப்பட வேண்டிய ஒன்று என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிறப்பு அண்ணா... தொடரட்டும் உங்கள் இலக்கியப் பங்களிப்புகள், நன்றி

    ReplyDelete