தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, July 5, 2020

தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - ஐம்பெருங்காப்பியங்கள் (சீவகசிந்தாமணி ) குறித்த தொகுப்புப் பாடல்கள்



ஐங்காப்பியங்களைக் கூறும் வெண்பா

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா

வளையாபதி  தருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டல கேசிக்கும்.

சீவகசிந்தாமணிப் பாடல்

நாமகள்கோ விந்தையடு நற்காந் தருவதத்தை

தாமகுண மாலை தனிப்பதுமை  - கேமசரி

மின்கனக மாலை விமலைசுர மஞ்சரியோ

டன்பி னிலக்கணைபத் தாம்.

சீவகன் மணம் செய்த எட்டு பெண்களின் பெயர்களையும் பதிவுசெய்கிறது இப்பாடல்

கோவிந்தை, காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை.

சீவகசிந்தாமணிப் பாடல்

தத்தைகுண மாலையடு தாவில்புகழ்ப் பதுமை

ஒத்தவெழிற் கேமசரி யண்கனக மாலை

வித்தகநல் விமலையடு வெஞ்சுரமஞ் சரிதான்

அத்தகையி லக்கணைய டாகமண மெட்டே

சீவகசிந்தாமணிப் பாடல் வெண்பா

பகைமாற் றொருநற் பரன்வாழ்த் தவைச்சொற் பதிக விலம்பகமோ

வகைமாற் றொருநா மகளோ கோவிந்தை மணமுறு தத்தைகுணம்

மிகைமாற் பதுமை கேமசரி கனகம் விமலையர் வீழ்சுரமஞ்

சகைமாற் றொடுமண் மகள்பூ விலக்கணை முத்தியீ ராறொன்றே.


No comments:

Post a Comment