தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Monday, July 6, 2020

ஆய்வறிஞர் வரிசை - பேராசிரியர் வீ. அரசு அவர்கள்

        

    பேரா. வீ. அரசு
அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர், துறைத்தலைவர் என பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு என்பது அவரின் பதவிக்குதானே தவிர அவரது சிந்தனைக்கு அல்ல. பல்வேறு செயல்பாடுகளின் மூலமாக இன்றும் தொடர்ந்து இயங்கி வருபவர்.

    தஞ்சையில் பிறந்த இவர் தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் நிறைவுசெய்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் 1985 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.  2002 ஆம் ஆண்டு முதல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கிய இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழ் பயிலும் மாணவர்கள் அந்தத் தடை இல்லாமல் மேல் படிப்பிற்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்கலைக்கழக மானியக்குழு வழங்கும் உதவித்தொகையைப் பெற மாணவர்களுக்கு வழிகாட்டியதோடு அதனைப் பெறவும் செய்தார்.

    கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க வகுப்பறைகள் மட்டும் போதாது என்று உணர்ந்த பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் வழியாக அறிஞர்கள், படைப்பாளிகள் எனப் பலரையும் அழைத்து அவர்களின் உரைகளின் வழியாகவும் விவாதங்களின் வழியும் மாணவர்களின் அறிவின் விரிவாக்கத்திற்கு துணைநின்றார்.

    மாணவர்கள் சூழ எப்போதும் இருக்கும் பேராசிரியர் மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பலநிலைகளில் பாடுபட்டவர். மரபிலக்கியம், நவீன இலக்கியம், அச்சு ஊடகம், ஆவணம் எனத் தொடர்ந்து பல நிலைகளில் பயணித்த பேராசிரியர் இந்தத் துறைகள் சார்ந்து பல நூல்களை உருவாக்கினார்.

    பேராசிரியர் மட்டுமல்லாது பேராசிரியரின் மாணவர்கள் பலரும் இந்தத் துறைகளில் நூல்கள் பல உருவாக்கியவர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பணிசெய்யும் மாணவர்கள் இவர் வகுத்துத் தந்த பாதையில் தம் வகுப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். பேராசிரியர் அவர்கள் பேச்சளவில் இல்லாமல் வாழும் வீட்டையே நூலகமாக மாற்றி தமிழ்ச்சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் அதனை நிலைநிறுத்தியுள்ளார்.

    பேராசிரியரின் தமிழ் ஆய்வுப் பயணம் நீண்ட நெடியது. அவரது பயணத்தின் சில தடயங்களை மட்டும் எதிர்காலத் தலைமுறை அறிந்துகொள்ள பதிவு செய்கிறேன்.



பேராசிரியரின் செயல்பாடுகள்:

1978 - முதுகலைத் தமிழ், அ. வீரையா வாண்டையார் நினைவு புட்பம் கல்லூரி, தஞ்சாவூர்

1979 - ஆய்வு நிறைஞர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை

1983 - முனைவர் பட்டம், தமிழ்ச் சிறுகதை வரலாறு (1930 - 1950) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

1985 முதல் 2014 - வரை - பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை.

இவர் வழியே பட்டம் பெற்றவர்கள் - ஆய்வு மாணவர்கள் - 48 பேர், ஆய்வியல் நிறைஞர் - 120 பேர் 




வெளியீடுகள்

ஆய்வு - பதிப்பு - நூல்கள் - 44

ஆய்வு - ஆய்வுக் கட்டுரைகள் - நூல்கள் - 4

ஆய்வு - நூல்கள் 2

ஆய்வு - சிறுநூல்கள் - 7

ஆய்வு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் - 60

ஆய்வு - மாற்று வரிசை நூல் வெளியீடு - பொதுப் பதிப்பாசிரியர் - 9

ஆய்வு கையேடுகள் - பதிப்பாசிரியர் - 8

ஆய்வு இதழ்களில் ஆசிரியப் பணி - 4

சாத்தான்குளம் அ. இராகவன் நூற்களஞ்சிய தொகுதி, மதிப்புரை - தமிழ்மண் வெளியீடு

ஆய்வு - நூல் தொகுதிகள் - மலர்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் - 43

இவை தவிர அகில உலக அளவிலான, தேசிய அளவிலான கரத்தரங்குகளில் மாநாடுகளில் பங்கேற்று கட்டுரைகள் வழங்கியவை எண்ணிலடங்கா.

பேராசிரியரின் ஆய்வு - பதிப்பு நூல்கள் பட்டியல்

1. 2013 - மயிலை சீனி வேங்கடசாமி நூற்களஞ்சியம்: 20 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம், சென்னை

2. 2012-சங்க இலக்கியம்: பன்முக வாசிப்பு (பதிப்பு), மாற்று வெளியீடு, சென்னை.

3. 2012 -இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு (பதிப்பு), அடையாளம் பதிப்பகம், திருச்சி.

4. 2012 - சென்னை இலெளகிகச் சங்கம், தொகுதி - 1, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

5. 2012 - தத்துவம் - கடவுள் - நாத்திகம், தொகுதி - 2, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

6. 2012 - சாதி - பெண்கள் - சமயம், தொகுதி - 3, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

7. 2012 - காலனியம் - விஞ்ஞானம் - மூடநம்பிக்கை, தொகுதி - 4, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

8. 2012 - Atheism and Theism, Ncbh, Chennai.

9. 2012 - Women - Culture and Poverty, Ncbh, Chennai.

10.  2011 - புதுமைப்பித்தன் கதைகள் - இதழ்வழிப் பதிப்பு - முழுத்திரட்டு - அடையாளம், திருச்சி

11. 2009 - சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு, சுவாமிகளின் பதினெட்டு நாடகங்களை ஒரே திரட்டாகப் பதிப்பித்தமை, வல்லினம் வெளியீடு, புதுச்சேரி

12. 2007 - ப. ஜீவானந்தம் ஆக்கங்கள்: ப. ஜீவானந்தம் பேச்சு மற்றும் எழுத்துக்களை நான்கு தொகுதிகளாகப் பதிப்பித்தமை (சுமார் 7500 பக்கங்கள், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

13. 2005 - புதுமைப்பித்தன் கதைகள்: புதுமைப்பித்தன் கதைகள் இதழ்களில் வெளிவந்த அடிப்படையில் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்தமை: மணிக்கொடிக் கதைகள், ஊழியன் கதைகள், கலைமகள் கதைகள்

14. 2004 - ரிக் வேதம் - மூன்று தொகுதிகள், அலைகள் பதிப்பகம், சென்னை

15. 2002 - வ.உ.சி.நூல் திரட்டு: வ.உ.சி. அவர்களின் பதிமூன்று நூல்கள் ஒரே திரட்டாகப் பதிப்பிக்கப்பட்டன.

16. 2002 - நாட்டார் சாமிகள்: தமிழகத்தில் உள்ள பல்வேறு நாட்டார் தெய்வங்கள் குறித்த கள ஆய்வு

17. 2001 - வாய்மொழி வரலாறு: தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதிக் குழுக்களைச் சார்ந்த வெகுசனங்களின் நேரடிப் பதிவு.

18. 2001 - பெண்ணியமும் பாரதியும்: பாரதியின் பெண்ணியம் தொடர்பான் கட்டுரைகள் பதிப்பு.

ஆய்வு - ஆய்வுக் கட்டுரைகள் - நூல்கள்

19. 2001 - ஆக்டோபசும் கறிக்கோழியும்: தமிழ் ஊடகங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு.

20. 2001 - புனைவின் வரலாறும் வாசிப்பின் அரசியலும்: நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு.

21. 2001 - தமிழியல் ஆய்வு - கருத்துநிலைத் தேடல் - தமிழ் ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் தொகுப்பு

22. 1984 - வானம்பாடிகள்: இக்காலக் கலை இலக்கியம் பற்றிய கட்டுரைகள்.

ஆய்வு - நூல்கள்

23. 2006 - சிறுபத்திரிக்கை அரசியல்: கங்கு வெளியீடு, பரிசல் பதிப்பகம்

24. 2004 - மயிலை சீனி வேங்கடசாமி: இந்திய இலக்கியச் சிற்பிகள், சாகித்திய அகாடமி வெளியீடு.

ஆய்வு - சிறுநூல்கள் 

25. 2012 - சித்தர் மரபு: நவீன சித்து விளையாட்டுகள், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

26. 2012 - திராவிட இயக்கம் - 100 ஆண்டுகள், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

27. 2012 - தமிழியல் கல்வி குறித்த உரையாடல், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

28. 2012 - தமிழ் இசை தமிழ்க் கல்வி, என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

29. 2012 - சங்க நூல்களின் காலம், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

30. 2012 - ச. வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு வரலாறும் இலக்கிய வரலாறும், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை

31. 2012 - தமிழ் உரை உருவாக்க மரபு: தோற்றம் - பண்புகள் - பயன்கள், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை.



இவை தவிர பேராசிரியரின் பணிகளை விரிவாக அறிந்துகொள்ள:

1. 2014 - ஓர்மைவெளி ( பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை.

2. அ. மோகனா, தமிழியல் ஆய்வுவெளி: வீ. அரசு ஆசிரியம் - ஆய்வு, சந்தியா பதிப்பகம், சென்னை.

பேராசிரியர் வெளியீடுகளின் முகப்புப் பக்கங்கள்






























 



தரவுகள் : நன்றி - ஓர்மைவெளி நூல்.
படம்: நன்றி விகடன்

5 comments:

  1. நன்றி அய்யா புத்தகங்கள் கிடைக்குமா ஓர்மைவெளி

    ReplyDelete
  2. ஐயாவின் பெருமைகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி ஜெய்கணேஷ்

    ReplyDelete