தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Tuesday, July 7, 2020

இளம் ஆய்வாளர் வரிசை – முனைவர் ப. சரவணன்



தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் ப. சரவணன் அவர்கள். பதிப்பு, தொகுப்பு, உரை, ஆய்வு எனப் பல தளங்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டு தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். முதுகலைத் தமிழாசிரியராகப் பணிசெய்து வரும் ப.சரவணன் அவர்கள் முதுகலை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் ஆகியவற்றை சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறைவு செய்தவர்.

ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் போது அருட்பா x மருட்பா போர் குறித்து ஆய்வு செய்து பின்னர் அதனை நூலாகவும் வெளியிட்டு தமிழ்ச்சூழலில் பெரிதும் கவனம்பெற்ற ஆய்வாளராக மாற்றம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய தொகுப்புகள், பதிப்புகள் எழுதிய உரைகள் அனைத்தும் செய்நேர்த்தி கொண்டவை.

தொகுப்புகளை எடுத்தோம் தொகுத்தோம் என்றில்லாமல் அதற்கென சில முறைமைகளை வகுத்துக்கொண்டு சரவணன் அவர்கள் உருவாக்கிய தொகுப்புகள் பெரிதும் எல்லோராலும் பாராட்டப்பெற்றன. உ.வே.சா. அவர்களின் ஒட்டுமொத்தப் பதிப்பு முகவுரைகளைத் தொகுத்து அந்தப் பதிப்பு முகவுரைகளின் தன்மைகள் சிதையாமல் செய்த பணி தனித்துச் சுட்டத்தக்கது. சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, வேமன நீதிவெண்பா முதலான நூல்களுக்கு இவர் எழுதிய உரைகள் அடிப்படை நிலையிலிருந்து ஆய்வு நிலைவரை வாசிப்பவர்களுக்குப் பயன் தருவதாக உழைத்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் நூல்கள் தமிழினி பதிப்பகம், மக்கள் வெளியீடு, சந்தியா பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் வழி வெளிவந்துள்ளன. நூல்கள் மட்டுமல்லாது பல்வேறு நூல்களுக்கு எழுதி இதழ்களில் வெளிவந்த ஆய்வுரைகள், பல பொருண்மைகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், மாநாடு கருத்தரங்குகள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எனப் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளார்.

இவர் செய்த பணிகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இளம் படைப்பாளி களுக்கான சுந்தர ராமசாமி விருது, தமிழ் நிதி விருது முதலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

ப. சரவணன் அவர்களின் நூல்கள் – தொகுப்பு/ பதிப்பு/ ஆய்வு/ உரை

1. 2017 - உ.வே.சா.வின் என் சரித்திரம், காலச்சுவடு பதிப்பகம்,

2. 2017 – தாமோதரம் (சி.வை.தா. பதிப்புரைகள்), காலச்சுவடு பதிப்பகம்.

3. 2016 – உ.வே.சா. கட்டுரைகள் (5 தொகுதிகள்), காலச்சுவடு பதிப்பகம்.

4. 2016 - தமிழ் விடு தூது, சந்தியா பதிப்பகம்.

5. 2014 – சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்), காலச்சுவடு பதிப்பகம்.

6. 2013 – கலிங்கத்துப்பரணி உரை, சந்தியா பதிப்பகம்.

7. 2011 – கமலாம்பாள் சரித்திரம், சந்தியா பதிப்பகம்.

8. 2010 – நவீன நோக்கில் வள்ளலார், காலச்சுவடு பதிப்பகம்.

9. 2009 – அருட்பா - மருட்பா கண்டனத் திரட்டு, காலச்சுவடு பதிப்பகம்.

10. 2009 – வாழையடி வாழையென..., சந்தியா பதிப்பகம்.

11. 2009 – வேங்கடம் முதல் குமரி வரை, சந்தியா பதிப்பகம்.

12. 2008 – சிலப்பதிகாரம் உரை, சந்தியா பதிப்பகம்.

13. 2007 – வேமன நீதி வெண்பா உரை, சந்தியா பதிப்பகம்.

14. 2005 – வள்ளலாரின் மநுமுறை கண்ட வாசகம், சந்தியா பதிப்பகம்.

15. 2005 - கானல்வரி ஒரு கேள்விக்குறி, தமிழினி பதிப்பகம்.

16. 2004 – நாலடியார் (புஷ்பரதச் செட்டியார் பதிப்பு), சந்தியா பதிப்பகம்.

17. 2002 – மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி 5,6 – மக்கள் வெளியீடு.

18. 2001 - மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி 1,2,3,4 – மக்கள் வெளியீடு.

19. 2001 – அவ்வையார் கவிதைக் களஞ்சியம், ராஜராஜன் பதிப்பகம்.

20. 2001 - அருட்பா x மருட்பா, தமிழினி பதிப்பகம்.

நூல்களின் முகப்பு அட்டைகள்























முகப்புப் படங்கள் : நன்றி:
விருபா டாட்காம், அமேசான் டாட்காம், காமன்போக்ஸ் டாட்காம்.காலச்சுவடு


























1 comment:

  1. இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் ;'\

    ReplyDelete