Monday, July 20, 2020
ஆண் கவியும் பெண் பெயரும்
Sunday, July 19, 2020
தோசை என்பது கலை
இங்க் அடிப்போமா
Saturday, July 18, 2020
கட்டைப் பை
Wednesday, July 15, 2020
இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கை. சங்கர்
முனைவர் கை. சங்கர் அவர்களைத் தொல்காப்பியரின் மாட்டு குறித்த
ஆய்வுக்கட்டுரைக்காக முதன்முதலாகத் தொடர்பு கொண்டேன். அவர் மாட்டு என்னும் இலக்கணமும்
நச்சினார்க்கினியர் உரையும் என்னும் தலைப்பில் நூல் எழுதியிருந்தார். அந்த நூல் குறித்து
அவரோடு உரையாடும் போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார்.
மாட்டு குறித்து
அன்று அலைபேசி வழியாக நிகழ்த்திய விவாதங்களி லிருந்தும் அவர் நூலை வாசித்ததன் வழியும்
சங்கர் அவர்களின் ஆய்வின் ஆழத்தை நான் அறிந்துகொண்டேன். அது மட்டுமல்லாது ஆய்வு அறம்
கொண்டவர்களில் இவரும் ஒருவர். விரிவாக வாசித்துக் கொண்டிருப்பவர். சங்க இலக்கியங்கள்
தொடங்கி நவீன இலக்கியங்களோடு வேறு பல துறைகளையும் நன்கு அறிந்தவர்.
தற்போது நந்தனம்
அரசினர் ஆடவர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சங்கர் அவர்கள் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம் வழியாகத் திருக்குறளும் பொருள்கோளும் என்னும் தலைப்பில்
ஆய்வு நிகழ்த்தி 2007 ஆம் ஆண்டு முனைவர்பட்டம் பெற்றவர். திருக்குறளில் ஆய்வு மேற்கொண்டு
ஆழ்ந்து வாசித்ததன் விளைவாகத் திருக்குறள் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக
மானியக்குழுவின் பெருந்திட்டத்தின் முனைவர் கை. சங்கர் அவர்கள் சிறந்த செயலி ஒன்றை
உருவாக்கியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலியில் 1812 முதல்
1950 வரை வெளிவந்த செம்மொழி இலக்கண இலக்கியப் பதிப்புகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
நூல்கள் தேவைப்படுவோர் Sanga
Elakkiyam APP என்னும் செயலியின் வழியாகவும் Sanga
Elakkiyam. Org என்ற இணையதளம் வழியாகவும் பதிவிறக்கம் செய்து வாசிக்க இயலும்.
பேராசிரியர், ஆய்வாளர் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல்
தம் சிந்தனையின் விருட்சங்களைத் திரையின் வழியாகவும் உலகெங்கும் கொண்டு சேர்த்துள்ளார்.
இவரின் மாணவர் நெல்சன் அவர்கள் இயக்கிய ஒருநாள்கூத்து, மான்ஸ்டர் எனத் தமிழின் இன்றியமையாத
இரண்டு திரைப்படங்களில் சங்கர் தாஸ் என்னும் பெயரில் கதை, திரைக்கதை, வசனம்
எழுதி திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ் பயிலும் மாணவர்கள் பேராசிரியர்
பணி என்று மட்டும் தம்மைச் சுருக்கிக் கொள்ளாமல் திரை உலகிலும் சாதனை புரிய சங்கர்
அவர்கள் முன்மாதிரியாக நிற்பதோடு எதிர்காலத்தில் பயணம் செய்ய இருப்பவர் களுக்காகத்
தமிழ் இலக்கிய மாணவர்கள் திரைக்கதை, வசனம் எழுது தலுக்கான வழிகாட்டி பயிற்சி நூலாக
திரைத்தமிழ் என்னும் நூலை விரைவில் வெளியிடவுள்ளார்.
முனைவர் கை. சங்கர் அவர்களின் நூல்கள்
2003 – ஒரு விடியலில் இருந்து இன்னொரு விடியல் வரை (கவிதை)
2008 – திருக்குறள் பொருள்கோள் உரை விளக்கம் ( அறத்துப்பால்)
2008 – திருக்குறள் உரைச் சிந்தனைகள்
2008 – மாட்டு என்னும் இலக்கணமும் நச்சினார்க்கினியர் உரையும்
2008 – சில குறள்கள் சில முடிவுகள்
திரைப்படப் பணி
(சங்கர்
தாஸ் என்ற
புனைபெயரில் எழுதியுள்ளார்
)
2016 - ஒரு நாள் கூத்து – (கதை, திரைக்கதை, வசனம்)
2019 – மான்ஸ்டர் (தமிழ்) – (கதை, திரைக்கதை, வசனம்)
Friday, July 10, 2020
நாற்றம் - வாசம்
இளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கி. பார்த்திபராஜா
எனது அனுபவத்தினூடே
தமிழ்ப் பேராசிரியர் என்பவர் ஆசிரியர்
பணி என்பதைக் கடந்து பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய ஒருவர் என்பதைத் தன் இயங்கியலின்
வழி தொடர்ந்து அடையாளப்படுத்தி வருபவர் முனைவர் கி. பார்த்திபராஜா அவர்கள். முதுகலை
வகுப்பில் முதன்முதலாக கி. பார்த்திபராஜா அவர்களை முனைவர்பட்ட ஆய்வாளராகச் சந்தித்தபோது
இவர் குரலின் கம்பீரமும், உடை நேர்த்தியும், பாடம் நடத்தும் முறையும் என்னைக் கவர்ந்தன.
ஒரு ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டும்
என்றும் எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் தனது உழைப்பாலும் செயலாலும் தொடர்ந்து எங்களுக்கு
போதித்தவர். வகுப்பறை மட்டுமல்லாது வெளியில் பரந்துவிரிந்து இருக்கும் தமிழ் உலகத்தை
எனக்கு அறிமுகப்படுத்தியவர். வீதி நாடகங்கள் வழியாக எனக்கு ஏதோ கொஞ்சம் நடிக்கவரும்
என்ற நம்பிக்கையை முதன்முதலில் விதைத்தவர். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களைத்
தடுக்க கமிஷனர் அலுவலகத்தின் வழியே கொடுக்கப்பட்ட விழிப்புணர்வு தொடர்பாக வீதிநாடகங்கள்
பலவற்றில் என்னை நடிக்க வைத்து பேர் பெற்றுத் தந்ததோடு அதற்கான தொகையையும் வாரா வாரம்
வழங்கியவர். அந்தத் தொகையின் அவசியம் அன்றிருந்த நிலையில் எவ்வளவு பேருதவி என்பது சொல்லிமாளாது.
இந்த நாடக அனுபவமே பின்னாளில் மேடை நாடகங்கள் பலவற்றில் நான் நடிக்க பேருதவி புரிந்தது.
Thursday, July 9, 2020
தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பக்தி இலக்கியம் (சைவம்)
சைவப்பெரியோர் நால்வர் அவதாரச் சிறப்பு
சொற்கோவுந் தோணிபுரத்
தோன்றலுமென் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த்
தேசிகனு - முற்கோலி
வந்திலரே னீறேங்கே
மாமறைநூல் தானெங்கே
எந்தைபிரா
னைந்தெழுத்தெங் கே.
சமயக்குரவர்
வயது
அப்பருக்கெண் பத்தொன்
றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற்
றெய்வீகம் - இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு
தொன்ஞான சம்பந்தர்க்
ணூந்தம் பதினா றறி.
Wednesday, July 8, 2020
பரோட்டா புராணம் - 1
Tuesday, July 7, 2020
சுதந்திரம் என்பது...
இளம் ஆய்வாளர் வரிசை – முனைவர் ப. சரவணன்
தமிழ்ச்சூழலில்
தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் ப. சரவணன் அவர்கள்.
பதிப்பு, தொகுப்பு, உரை, ஆய்வு எனப் பல தளங்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் பலவற்றை
வெளியிட்டு தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். முதுகலைத் தமிழாசிரியராகப்
பணிசெய்து வரும் ப.சரவணன் அவர்கள் முதுகலை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் ஆகியவற்றை
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறைவு செய்தவர்.
ஆய்வியல் நிறைஞர் பட்டத்தின் போது அருட்பா x மருட்பா போர் குறித்து ஆய்வு செய்து பின்னர் அதனை நூலாகவும் வெளியிட்டு தமிழ்ச்சூழலில் பெரிதும் கவனம்பெற்ற ஆய்வாளராக மாற்றம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய தொகுப்புகள், பதிப்புகள் எழுதிய உரைகள் அனைத்தும் செய்நேர்த்தி கொண்டவை.
Monday, July 6, 2020
சங்க இலக்கியத்தில் பாய்மரக் கப்பல்
ஆய்வறிஞர் வரிசை - பேராசிரியர் வீ. அரசு அவர்கள்
Sunday, July 5, 2020
இறையனார் களவியலுரைப் பதிப்புகள்
கானல் நீர்
தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - ஐம்பெருங்காப்பியங்கள் (சீவகசிந்தாமணி ) குறித்த தொகுப்புப் பாடல்கள்
ஐங்காப்பியங்களைக்
கூறும் வெண்பா
சிந்தா மணியாம்
சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே
கலைபுனைந்தான் - நந்தா
வளையாபதி தருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டல கேசிக்கும்.
தமிழ் நூல் தொகுப்புப் பாடல்கள் - பதினெண் கீழ்க்கணக்கு (திருக்குறள், நாலடியார்) குறித்த தொகுப்புப் பாடல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப
தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி
மாமூலம்
இன்னிலை காஞ்சியோ டேலாதி
யென்பவே
கைந்நிலையு மாங்கீழ்க்
கணக்கு.
திருக்குறள்
Saturday, July 4, 2020
சங்க இலக்கியச் சொல்வளமும் தமிழ்ச்சமூக ஆவணமும் - தமிழ்ச் சொல்வளம் - சங்க இலக்கியம் – பூவுலகு
மொழி அறக்கட்டளை
பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி, சொல் வழக்குக் கையேடு, தற்காலத் தமிழ்ச்
சொற்சேர்க்கை அகராதி முதலானவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களின் சொல்வளத்தினைத் தமிழ்ச்
சொல்வளம் என்னும் வரிசையில் அடைவுபடுத்தி வெளியிட்டு வருகிறது மொழி அறக்கட்டளை. அகராதியியல் துறையிலும் நாட்டார் வழக்காற்றியல் துறையிலும் ஆழங்கால்பட்ட பேராசிரியர்
பா.ரா.சுப்பிரமணியன்
அவர்களின் கடுமையான உழைப்பில் உருவாகி வரும் இந்த சொல்வளப் பொருளகராதிகள் அதிக நம்பகத்தன்மை
கொண்டவை.
சங்க இலக்கியத்தில் உள்ள சொற்களை அறிவதற்கு நமக்குத் துணைசெய்பவை சொல்லடைவுகள் மற்றும் பொருளடைவுகளே. கேரளப் பல்கலைக்கழகம் வழியாக உருவாக்கப்பட்ட சொல்லடைவுகள், தாமஸ் லேமன் – தாமஸ் மால்டன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சங்க இலக்கியச் சொல்லடைவு, பெ.மாதையன் அவர்களின் சங்க இலக்கியச் சொல்லடைவு, புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள், பாண்டியராஜா அவர்கள் இணைய வழி உருவாக்கிய சங்கத் தொடரடைவு (sangam concordance) முதலானவை சங்க இலக்கியத்தின் சொற்களைப் பலநிலைகளில் அடைவுபடுத்தித் தருகின்றன. புலவர் மணியன் அவர்களின் சங்க இலக்கிய வினைவடிவங்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வினைகளையும் அவற்றின் வடிவங்களையும் நிரல்படுத்தி பொருண்மை வேறுபாடுகளோடு தருகிறது. அகராதியியல் நோக்கில் சில குறைபாடுகள் காணப்படினும் சங்க இலக்கிய வினை வடிவங்களை முழுவதுமாக அறிந்துகொள்வதற்கு இந்த நூலே பெரிதும் துணை செய்கிறது.
-
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்த பழம் பாடல்கள் மனப்பாடக் கல்விமுறையையொட்டி எழுதி வைக்கப்பட்டுள்ளன. காலங் க...
-
தமிழ் இலக்கண இலக்கியங்களைப் போலவே நிகண்டு மரபும் தொன்மை வாய்ந்த மரபாகத் தொடர்ந்து வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு திவாகரம் தொடங்...
-
தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைக்கிற இலக்கண நூல்களில் இரண்டாவதாகத் திகழ்வது இறையனார் களவியல் நூலும் அதன் உரைய...



























